search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லாரி தண்ணீர் கட்டணம் உயர்வு"

    டீசல் விலை உயர்வு காரணமாக சென்னையில் லாரி தண்ணீர் கட்டணம் கடந்த 21-ந்தேதி முதல் உயர்த்தப்பட்டுள்ளது. வீடுகளுக்கு விற்கப்படும் லாரி தண்ணீர் விலை 5 சதவீதம் அதிகமாகி உள்ளது.
    சென்னை:

    டீசல் விலை உயர்வு காரணமாக சென்னையில் லாரி தண்ணீர் கட்டணம் கடந்த 21-ந்தேதி முதல் உயர்த்தப்பட்டுள்ளது.

    சென்னையில் லாரிகள் மூலம் இலவசமாக தண்ணீர் வினியோகிக்கப்பட்டாலும் வீடு, நிறுவனங்களுக்கு குடிநீர் வாரியத்தில் பதிவு செய்தால் தனியாக லாரி தண்ணீர் அனுப்பும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது. இதற்காக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

    6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மினி லாரி தண்ணீர் ரூ.400-க்கு விற்கப்பட்டது. இப்போது இதன் விலை ரூ.475 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தொழிற்சாலை மற்றும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் தண்ணீர் ரூ.510-ல் இருந்து ரூ. 700 ஆக உயர்ந்துள்ளது.

    9 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட லாரி தண்ணீர் ரூ.600-ல் இருந்து ரூ.700 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளுக்கு ரு.765-ல் இருந்து ரூ.1000 ஆக உயர்ந்துள்ளது.

    16 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட டேங்கர் லாரி தண்ணீர் ரூ. 1070-ல் இருந்து விலை உயர்த்தப்பட்டு ரூ.1200-க்கு விற்கப்படுகிறது. நிறுவனங்களுக்கு வழங்கப்படும் லாரி தண்ணீர் ரூ.1360-ல் இருந்து ரூ.1700 ஆக உயர்ந்துள்ளது.

    இதுபற்றி சென்னை குடிநீர் வாரிய அதிகாரியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    கடந்த 10 ஆண்டுகளாக குடிநீர் கட்டணம் உயர்த்தப்படாமல் இருந்தது. பல்வேறு கால கட்டங்களில் டீசல் விலை உயர்ந்து கொண்டு வருவதால் கட்டணத்தை மாற்றி அமைத்துள்ளோம்.

    வீடுகளுக்கு விற்கப்படும் லாரி தண்ணீர் விலை 5 சதவீதம் அதிகமாகி உள்ளது. கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு விற்கப்படும் தண்ணீர் விலை 10 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #Diesel
    ×